Friday, September 9, 2011

விநாயகர் வழிபாட்டின் பலன்கள்


Hi friends,

I would like to share this useful that I read in 


விநாயகர் வழிபாட்டின் பலன்கள்

சிறப்பு செய்திகள்
திருமண தடை நீங்க
மஞ்சள் கொண்டு பிள்ளையார் செய்து வழிபட்டால் திருமண தடை நீங்கும்.திருமணமான தம்பதிகள் வழிபட்டால் அழகான ஆண்குழந்தை பிறக்கும் .
புகழ் ,உயர்ந்த பதவி கிடைக்க
மண்ணால் செய்த பிள்ளையாரை பூஜித்தால் நல்ல பதவி கிடைக்கும். புகழ் ,அந்தஸ்து ,கீர்த்தி கிடைக்கும் .உயர்ந்த பதவிகளில் கொண்டுபோய் அமர்த்துவார் .
வியாபாரத்தில் லாபம் கிடைக்க
புற்று மண்ணில் செய்த பிள்ளையாரை பூஜித்து வழிபட்டால் வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடையலாம்.வியாபார ரீதியாக ஏற்படும் தடைகள் அனைத்தும் நீங்கும் .புற்று மண் என்பது புண்ணிய நதிகளின் நீரைப்போன்று புனிதமானது .
சர்வ சித்தி ,திருடர் பயம் நீங்க
வெல்லத்தால் செய்த பிள்ளையாரை பூஜித்து வழிபட்டால் சகல பாக்கியத்தையும் பெறலாம் .உள்ளத்தில் ஏற்படும் பயம் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் .எதிரிகளை வெல்ல வெல்லத்தால் செய்த பிள்ளையாருக்கு சனிக்கிழமை தோறும் பக்தியுடன் பூஜிக்க வேண்டும் .
உறவினர் பகை நீங்க
உப்பினால் செய்த பிள்ளையாரை வணங்கினால் உறவினர் பகை நீங்கி சொந்தங்கள் அனைவரும் உங்களை தேடி வருவர் .
அறிவு ,கூர்மையான புத்தி,தெய்வ வாக்கு கிடைக்க
வெள்ளெருக்குப் பிள்ளையாரை பூஜித்தால் கூர்மையான அறிவு பெறலாம். மந்த புத்தியில் தெளிவு உண்டாகும் .மனிதர்களை உங்கள் பேச்சினால் வெற்றிகொள்ளலாம் .தெய்வ வாக்கு போல் நீங்கள் சொல்லும் வாக்கு அமையும் .நீங்கள் சொல்வது அனைத்தும் நடக்கும் .முறையாக வழிபட வேண்டும் .
எண்ணிய காரியங்கள் உடனே கைகூட
பசுஞ்சாணியால் பிள்ளையார் செய்து பூஜித்தால் எண்ணிய காரியங்கள் கைகூடும்.
உடல் வியாதிகள் .தோல் நோய்கள் நீங்க
வெண்ணெய் கொண்டு பிள்ளையார் செய்து பூஜித்தால் உடல் நோய்கள் நீங்கும்,நரம்புத்தளர்ச்சி நீங்கும் ,தோல் நோய்கள் நீங்கும் .
Share

No comments:

Post a Comment